sponsor

sponsor

Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Blog Archive

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

Sri lanka school Start | July 2020 | Covid 19 effects

யூலை 27 ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 11,12,13 வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொவிட்19 வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் தரங்களுக்கான கற்கை நெறிகள் மற்றும் பரீட்சை நடைபெறும் தினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக தரம் 11,12 மற்றும் 13 வகுப்பு கல்வி நடவடிக்கைகள் காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரையில் நடைபெறும். ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும்.

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனைக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

2020 பொதுத் தேர்தலுக்காக பாடசாலைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அது தொடர்பில் தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் ஆகியோர் யூலை மாதம் 28,29,30 மற்றும் 31 ஆகிய தினங்களில் பாடசாலையில் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளில் வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்க கல்வி அமைச்சு அலோசனை வழங்கியுள்ளது


GCE O/L 2020



க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்ப முடிவுத் திகதி - ஓகஸ்ட் 31
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பத்தினைப் பூரணப்படுத்த வேண்டும். 
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பிடிஎப் ஆக தரவிறக்கம் செய்து, அச்சுப்பிரதி எடுத்து, விண்ணப்பதாரியினதும், கிராம சேவகரினதும் கையொப்பம் இட்டு, பரீட்சைத் திணைக்களத்திற்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

பாடசாலைகளில் இருந்து விடுகைப் பத்திரம் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிக்க தகைமை கொண்டுள்ளனர். பாடசாலையில் கற்றுக் கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிக்க முடியாது.

2020 G.C.E O/L Exam

2020 O/L பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாகம் பீ.சனத் ஜயசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2020-07-22 முதல் 2020-08-31 திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை அனைத்து விண்ணப்பதாரிகளும் இணைய வழி ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்கு பிரவேசித்து குறித்த அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்து இணையவழி ஊடாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்


பிரேசிலில் மட்டும் 84 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

Covid 19 | today

 84 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டிய போது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 57 லட்சத்து 16 ஆயிரத்து 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 95 லட்சத்து 88 ஆயிரத்து 911 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 1,47,377
பிரேசில் - 84,251
இங்கிலாந்து - 45,554
மெக்சிகோ - 41,908
இத்தாலி - 35,092
இந்தியா -  30,821
பிரான்ஸ் - 30,182